மலேசிய நம்பிக்கை நிதிக்கு 24 மணி நேரத்தில் 70 லட்சம் நன்கொடை!
Share

{ 70 lakh donations Malaysian Trust Fund }
மலேசிய நாட்டின் கடன் தொகையைக் குறைப்பதற்காக மக்களும் பங்களிக்கலாம் என்ற அடிப்படையில் அரசாங்கம் தொடங்கிய மலேசிய நம்பிக்கை நிதிக்கு 24 மணி நேரத்தில் 70 லட்சம் வெள்ளி நன்கொடை கிடைத்திருப்பதாக நிதி அமைச்சர் லிம் குவான் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3 மணிக்கு ‘நம்பிக்கை’ நிதிக்கு கிடைத்த நன்கொடையின் மொத்த தொகை அறிவிக்கப்படும் என்றும் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (இன்று) புத்ராஜெயாவில் செய்தியாளர்களை சந்தித்த லிம் குவான் எங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கை நிதிக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிதிக்கு வழங்கப்படும் அனைத்து நன்கொடைகளும் நாட்டின் கடனை செலுத்த மட்டுமே பயன்படுத்தப்படும் என லிம் உறுதியளித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் 10 லட்சம் வெள்ளி கடனை செலுத்தினால் கூட நாட்டின் 1 டிரில்லியன் கடனை அடைக்க இரண்டாயிரத்து 270 நாட்கள் தேவைப்படும் என லிம் கூறியுள்ளார்.
மலேசியாவின் கடன் அதிகரித்திருந்தாலும், அரசாங்கம் அனைத்துலக நிதி அமைப்பை சார்ந்திருக்க தேவையில்லை என லிம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாட்டின் ரோன் 95, 97 பெட்ரோல் விலை தொடர்ந்து நிலை நிறுத்தப்படும் என லிம் கூறியுள்ளார். இதன் வழி ஆயிரத்து 700 கோடி வெள்ளியை மிச்சப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tags: 70 lakh donations Malaysian Trust Fund
<< RELATED MALAYSIA NEWS>>
*மலேசிய பிரதமர் மகாதீரின் முகம்மதின் அரசியல் வாழ்க்கையை பாலிவுட் திரைப்படமாகத் தயாரிக்க திட்டம்!
*மலாய் மொழியில் மலேசிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய நரேந்திர மோடி!
*தலைமறைவாகியுள்ள ஜமால் யூனோஸ் வீடியோ மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்!
*நினைத்ததைவிட நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது! துன் மகாதீர் அறிவிப்பு
*எம்ஆர்டி-3 ரயில் திட்டம் கைவிடப்படும் டாக்டர் மகாதீர் அறிவிப்பு!
*மலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்!
*மலேசியாவில் சாலையில் தேங்கிய நீரில் தட்டுகளைக் கழுவிய உணவக ஊழியர்கள்!
*மோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..!
*எம்எச்17 விமானம் குறித்து எழுதிய ரஷ்ய செய்தியாளர் சுட்டுக்கொலை..!
*போலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்!- கோபிவிகைடந்த் அதிரடி அறிவிப்பு!
*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக் டாக்டர் மகாதீர் உறுதி!
*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்!
<< RELATED MALAYSIA NEWS>>