ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சிக்கர் தவான் சதம் விளாசி புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் உணவு இடைவேளைக்கு முன் சதமடித்த முதல் இந்தியராக சிக்கர் தவான் இன்று பதிவாகியுள்ளார். உணவு இடைவேளைக்காக இந்திய அணி பெவிலியன் திரும்பியுள்ள நிலையில், ...
நியூஸிலாந்து கிரிக்கெட் வீராங்கனை அமீலியா கெர் சர்வதேச கிரிக்கட்டில் முக்கியமான சாதனையொன்றை நேற்று நிலைநாட்டியுள்ளார். மகளிர் கிரிக்கெட்டை பொருத்தவரையில் ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்ற வீராங்கனையின் பட்டியலில், கெர் முதலிடத்தை பிடித்துள்ளார். நேற்று நடைபெற்ற அயர்லாந்து மகளிர் அணிக்கெதிரான போட்டியில் அமீலியா கெர் 232 ஓட்டங்களை விளாசி ...
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணித் தலைவர் அஜின்கே ரஹானே முதலில் ...
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டுவிட்டரில் ஏ.என்.ஐ.டிஜிட்டல் என்ற ஊடகம் வெளியிட்டிருந்த பதிவுக்கு பதில் வெளியிட்டுள்ளமை தற்போது வைரலாக பரவி வருகின்றது. ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய இவர், தமிழில் டுவிட்டர் பதிவுகளை மேற்கொண்டு, அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்நிலையில் தொடர் முடிந்த பிறகும் ...
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக், ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ஸ்டெனிஷ்காயின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி நாளை பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாடும் ஆப்கானிஸ்தான் அணியிடம், இந்திய அணியை விட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ...
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கை தவிற, ஏனைய லீக் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தை பெற்றுள்ள வீரர்களுக்கே இந்த கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. லாஹுரில் நடைபெற்ற கவர்னிங் கவுண்சிலின் கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ...
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை பொருத்தவரையில், தற்போது மறுக்க முடியாத வீரராகியுள்ளவர் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷீட் கான். பந்து வீச்சிலும் சரி, இடைக்கிடையில் துடு்ப்பாட்டத்திலும் சரி, தன்னுடைய திறமைகளை சரியான நேரத்தில் அவர் வெளிப்படுத்த தவறுவதில்லை. ஆனால் இத்தனை திறமைகள் அடங்கிய ரஷீட் கானுக்கான ஐ.பி.எல். வாய்ப்பு ...
இலங்கை மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், எஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் லஹிரு கமகே ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர். எஞ்சலோ மெத்தியூஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடுதிரும்பியுள்ளார். மெத்தியூஸின் மனைவி இரண்டாவது குழந்தையை பிரசிவிக்கவுள்ள காரணத்தால் அவர் நாடு திரும்பியுள்ளதாக கிரிக்கெட் சபையின் தகவல்கள் ...
ஸ்கொட்லாந்துக்கு எதிரான ஒரு போட்டிக்கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில், பாகிஸ்தான் அணி 48 ஓட்டங்களால் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலிரண்டு விக்கட்டுகளும் 46 ஓட்டங்களுக்கு ...
அவுஸ்திரேலிய அணியின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா கவுண்டி அறிமுகப் போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ளார். கவுண்டி அணியான கிளாமர்கன் அணிக்காக அறிமுகமாகியுள்ள உஸ்மான் கவாஜா, வர்விக்ஸையர் அணிக்கெதிரான போட்டியில் விளையாடி வருகின்றார். இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய கவாஜா 416 பந்துகளில் ...
பங்களாதேஷ் ஏ அணியுடன் நடைபெறவுள்ள மூன்று நான்கு நாள் போட்டிக்கான இலங்கை ஏ அணியின் தலைராக திமுத் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஏ அணி மூன்று நான்கு நாள் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டியில் பங்கேற்க பங்களாதேஷ் செல்கின்றது. இந்த தொடரில் நடைபெறவுள்ள நான்கு நாள் போட்டிகளுக்கான ...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைர் மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இம்முறை ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியது. இரண்டு வருட தடைக்கு பின்னர் ஐ.பி.எல். தொடருக்கு திரும்பிய சென்னை அணியின் தலைமை பொறுப்பை ஏற்ற டோனி தலைமைத்துவத்திலும் சரி, துடுப்பாட்டத்திலும் சரி சிறந்த ...
இந்திய 19 வயதுக்குற்பட்டோர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நான்கு நாள் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை வருகின்றது. இந்த போட்டித் தொடரின் நான்கு நாள் போட்டிகளுக்கான அணிக்குழாமில், இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இணைக்கப்பட்டுள்ளார். 19 வயதுக்குற்பட்டோர் ...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரில் 3-0 என படுதோல்வியடைந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷீட் கான் ஒட்டுமொத்தமாக 8 விக்கட்டுகளை கைப்பற்றி, பங்களாதேஷ் அணிக்கு ஆட்டம் காண்பித்தார். இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டியில், பங்களாதேஷ் அணியின் முக்கிய துடுப்பாட்ட ...
கொல்கத்தாவைச் சேர்ந்த தேபாபிரத் பால் என்ற இளம் கிரிக்கெட் வீரர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 21 வயதான தேபாபிரத் பால் கொல்கத்தாவின் செராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் விவேகானந்த பார்க் பேரிலி கழகத்தில் ஒரு மாதத்துக்கு முன்னர் கிரிக்கெட் ...
மே.தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 226 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது. 453 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின், குசால் மெண்டிஸை தவிர ஏனைய துடு்ப்பாட்ட வீரர்கள், மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில், தனஞ்சய டி சில்வாவை இணைப்பதற்கான ...
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இறுதியாக இந்திய அணி தங்களது சர்வதேச போட்டியில், இலங்கையில் நடைபெற்ற சுதந்திரக் கிண்ணத்தில் விளையாடியது. பின்னர் இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றது. தற்போது இந்திய அணி மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியுள்ள ...
தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் கிரிக்கெட் வாழ்க்கையில் நீடிப்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியை பொருத்தவரையில், அனுபவம் வாய்ந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் டேல் ஸ்டெயின். தற்போது கார்கிஸோ ரபாடா மற்றும் லுங்கி என்கிடி ஆகியோர் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக ...
மலேசியாவில் நடைபெற்று வந்த ஆசிய கிண்ண மகளிருக்கான டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, பஙகளாதேஷ் மகளிர் அணி முதன்முறையாக சம்பியனாகியுள்ளது. ஆறு முறை சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியிருந்த இந்திய மகளிர் அணி இறுதி பந்தில் தங்களது தோல்வியை தழுவியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியின் நாணய சுழற்சியில் ...
மே.தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 226 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்துள்ளது. மே.தீவுகள் அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 223 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுகளை இழந்து, வெற்றியிலக்காக 453 ஓட்டங்களை நிர்ணயித்தது. 453 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வெறும் 226 ஓட்டங்களுக்கு ...
ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. மலேசியாவில் நடைபெற்று வரும் போட்டித் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இந்த போட்டி அமைந்திருந்தது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்து, மோசமான ...
நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் 490 ஓட்டங்களை குவித்து புதிய கிரிக்கெட் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இங்கிலாந்து அணி கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 444 ஓட்டங்களை பெற்றிருந்தமையே, ஒருநாள் போட்டிகளில் பெறப்பட்ட அதிக ஓட்டமாக இருந்தது. இந்த ஓட்ட ...
டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் மெழுகு அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் (புதன்கிழமை) மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோஹ்லியின் உருவம் அடங்கிய மெழுகு சிலை வைக்கப்பட்டிருந்தது. எனினும் சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அருங்காட்சியகம், அதனை ...
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரின் படுதோல்வி குறித்து பங்களாதேஷ் அணியின் தலைவர் சகிப் அல் ஹசன் கருத்து தெரிவித்துள்ளார். முதல் முறை இருபதுக்கு-20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்ட பங்களாதேஷ் அணி, 3-0 என வைட்வொஷ் ஆனாது. இறுதியாக நேற்று நடைபெற்ற போட்டியிலும் வெற்றியை நோக்கி முன்னேறிய பங்களாதேஷ் ...
இந்திய மகளிர் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனையாகவும், அணித்தலைவியாகவும் செயற்பட்டு வரும மிதாலி ராஜ், சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்த முதல் இந்தியராக பெருமையை பெற்றுள்ளார். சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளில் 2000 என்ற மைல் கல்லை டோனி, கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய முன்னணி ...
மே.தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டு விளையாடி வருகின்றது. மே.தீவுகள் அணி, முதல் நாள் ஆட்டநிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 246 ஓட்டங்களை பெற்ற நிலையில், நேற்று களமிறங்கியது. ஆறு விக்கட்டுகளை இழந்து தடுமாறிய மே.தீவுகள் அணியின் தனியொருவராக களத்தில் ...
ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு-20 போட்டியில் திரில் வெற்றிபற்ற ஆப்கானிஸ்தான் அணி, பங்களாதேஷ் அணியை வைட்வொஷ் செய்துள்ளது. தெஹ்ரா துணில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலி்ல் துடுப்பெடுத்தாடியது. சிறப்பாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ரோட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டள்ளது. ஸ்டீவ் ரோட்ஸ் எதிர்வரும் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ணம் வரையில் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த சந்திக ...
ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீட் கான் இலங்கை அணியின் முன்னாள் நட்ச்சத்திர சுழற்பந்து பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பயிற்றுவிப்பு தொடர்பில் புகழ்ந்துத்தள்ளியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீட் கான் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களால் பாராட்டப்பட்டு வருகின்றார். அவரது நுணுக்கமான பந்து வீச்சு மற்றும் அணியில் ...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பொலி உம்ரிகார் விருது வழங்கப்படவுள்ளது. இந்திய கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் பொலி உம்ரிகார் விருது, இந்திய கிரிக்கெட்டில் வழங்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்றாகும். இந்நிலையில் 2017-18ம் ஆண்டுக்கான அதிசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான ...